திண்டுக்கல்: நத்தம் - துவரங்குறிச்சி நெடுஞ்சாலையை அமைத்து வரும் ஆர்.ஆர்.இன்ப்ரா என்ற தனியார் கன்ஸ்ட்ரசனுக்கு கோசு குறிச்சியில் உள்ள தற்காலிக அலுவலகத்தில் 20 ஆம் தேதி முதல் 3 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை - வருமானவரித்துறையினர் சோதனை
நத்தம் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியில் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் 3 நாட்களாக நடந்த வருமானவரித்துறையினர் சோதனை நிறைவடைந்தது.
![நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15897283-thumbnail-3x2-incom.jpg)
நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை
இதேபோல் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி பகுதிகளில் ஆர்.ஆர்.இன்ப்ரா கன்ஸ்ட்ரக்சனுக்கு சொந்தமான ப்ளூ மெட்டல் இயங்கி வருகிறது. இங்கேயும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனை இன்று (ஜூலை 22) நிறைவு பெற்றது. சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.12 லட்சம் அபராதம்