மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் மோயர் பாய்ண்ட், தூண்பாறை, குணாகுகை, பைன்பாரஸ்ட், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. அதுமட்டுமின்றி, இயற்கையாகவே அமைந்துள்ள பசுமை காடுகள், மரங்கள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும்.
இதனைக் காண பல மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். அதன்படி தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர் விடுமுறை உள்ளதால், பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.