திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலாவதியான உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கொடைக்கானல் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
இச்சோதனையில் காலாவதியான இனிப்பு, கார வகைகள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்காப் பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் தலைமையிலான அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.