தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குரூப் 2,2ஏ தேர்வுகளில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதுகின்றனர்'

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேர் தேர்வு எழுதுகிறார்கள் என தேர்வாணைய குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

குரூப் 2,2ஏ தேர்வுகலில் - பெண்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதுகின்றனர்
குரூப் 2,2ஏ தேர்வுகலில் - பெண்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதுகின்றனர்

By

Published : May 20, 2022, 10:31 PM IST

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ ஆகிய தேர்வுகள் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் மையங்களில் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் கொடைக்கானல் வந்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது, ’தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள 117 தாலுகாக்களில் 4,012 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று காலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படவில்லை. குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வுகளில் தமிழகம் முழுவதும் 11 லட்சத்து எழுபத்து எட்டாயிரத்து 175 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

ஆண்களை விட பெண்கள் ஒரு லட்சத்து எண்பத்து ஐந்தாயிரத்து 585 பேர்கள் கூடுதலாக இந்த தேர்வை எழுதுகிறார்கள். ஐயாயிரத்து 529 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளதையே இது காட்டுகிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ்

கொடைக்கானலில் 512 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். ஆள் மாறாட்டம் மற்றும் குளறுபடி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் வழி கல்வி கற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது பெரிய மாற்றத்தை நோக்கிச் செல்கின்றது. பிப்ரவரி மாதத்தில் இந்த தேர்வு முடிவுகள் தெரியவரும்’ என அவர் கூறினார்.

இதையும் படிங்க:அறநிலையத்துறையில் வேலை: ரூ.75ஆயிரம் சம்பளம்... விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம்!

ABOUT THE AUTHOR

...view details