திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுமி தோட்டத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதில் சிறுமியை பாலியல் கொடுமை செய்த குணசேகரன்(16 ) என்ற சிறுவனும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் கிஷோர்(14), உமா சேகர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதில் ஒரு சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ், மற்றொரு சிறுவன் மோட்டார் வாகன சட்டம் 180 இன் படி கைது செய்து சிறார் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொலையில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான உமா சேகரை ஐபிசி 304 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து வேறு சிறையில் அடைக்கப்பட்டார்.