தமிழ்நாடு

tamil nadu

வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை - ராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு!

By

Published : Jan 21, 2020, 10:52 PM IST

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு, ராணுவ வீரரான அவர் கணவர்தான் காரணம் என பெண் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

in-dindigul-woman-suicides-on-dowry-issue-case-allegedly-suspicion-turns-to-her-husband-army-officer
வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பண்ணப்பட்டியைச் சேர்ந்த பிரம்மசாமி - ஈஸ்வரி தம்பதியின் மகள் முத்துலட்சுமி என்பவருக்கும், ராணுவத்தில் பணிபுரியும் அதே ஊரை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது முத்துலட்சுமிக்கு அவர்களது பெற்றோர் வரதட்சணையாக 15 பவுன் நகை கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் ஐந்து பவுன் நகை கொடுப்பதாக திருமணத்திற்கு முன் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

லட்சுமணன் திருமணமான மூன்று மாதத்தில், மனைவி முத்துலட்சுமியை காஷ்மீருக்கு அழைத்துச் செல்வதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் திருமணமான ஒரே மாதத்தில் அவர் மட்டும் தனியாக காஷ்மீருக்கு சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து கடந்த தீபாவளிக்கு பத்து தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்த லட்சுமணன், பண்டிகை முடிந்த பின்பும் தனது மனைவியை தன்னுடன் அழைத்து செல்லவில்லை. இதற்கு முத்துலட்சுமியின் மாமியார் தனலட்சுமி, லட்சுமணன் அக்கா சத்தியா மற்றொரு அக்கா பசுபதி பிரியா ஆகியோர் தடையாக இருந்ததாக முத்துலட்சுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். தற்போது பொங்கலுக்கு வருவதாக உறுதியளித்த லட்சுமணன் வரவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் காஷ்மீரிலிருந்து லட்சுமணன் தனது மனைவி முத்துலட்சுமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், முத்துலட்சுமி தரவேண்டிய அந்த ஐந்து பவுன் நகையுடன் ரூ. 2 லட்சம் பணம் கொண்டு வந்தால்தான் அவரை காஷ்மீர் அழைத்துச் செல்வதாக லட்சுமணன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி தனது பெற்றோரின் வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதன் பின் இதுகுறித்து கன்னிவாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியின் உடலை உடற்கூறாய்விற்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து முத்துலட்சுமியின் பெற்றோர், உறவினர்கள் தங்களது மகளின் இறப்பிற்கு காரணமான மருமகன் லட்சுமணன் காஷ்மீரிலிருந்து வந்தால்தான் உடலை வாங்குவதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து அரசு அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, லட்சுமணன் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்வதாக உறுதியளித்த பின் முத்துலட்சுமியின் உறவினர்கள், அவரின் உடலை வாங்கி சென்றனர்.

வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை உறவினர்கள் மருத்துவனையில் முற்றுகைப் போராட்டம்

இதையும் படியுங்க: 'தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்தேன்' - மனம் திறந்த பிரவீன் குமார்

ABOUT THE AUTHOR

...view details