தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் கடைகள் திறக்கக் கட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி!

திண்டுக்கல்: மாவட்டத்தில் மதியம் 2 மணி வரை மட்டும் குறிப்பிட்ட கடைகளை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கலில் கடைகள் திறக்க கட்டுப்பாடு -மாவட்ட ஆட்சியர் அதிரடி!
திண்டுக்கலில் கடைகள் திறக்க கட்டுப்பாடு -மாவட்ட ஆட்சியர் அதிரடி!

By

Published : May 5, 2020, 2:47 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில கடைகள் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், “திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, மாவட்டத்தில் காலை 9 மணி முதல் 2 மணி வரை தான் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். மேலும் அத்தியாவசியப் பொருட்களான மருந்துக் கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை வழக்கம் போல் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கலாம்.

கட்டுமானப் பணிகளுக்கான கடைகள், ஹார்டுவேர், பெயின்ட் கடைகள், சிமென்ட் கடைகள், விவசாயத்திற்குத் தேவையான பைப், மோட்டார் விற்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தான் திறந்து இருக்க வேண்டும். இது தவிர்த்து மற்ற கடைகள் திறப்பதற்கு அனுமதி கிடையாது. தடையை மீறி திறக்கப்படும் கடைகளுக்குச் சீல் வைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...சென்னையில் தீவிரம் காட்டும் கரோனா: ஐடி, தொழில் நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள் திறப்பது குறித்த நிபந்தனை என்ன?

ABOUT THE AUTHOR

...view details