தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள்!

திண்டுக்கல்: கரோனா காலத்தில்கூட பாதுகாப்பு உபகரணங்களின்றி, வெறும் கைகளால் 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்!
பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்!

By

Published : May 12, 2020, 12:19 PM IST

கரோனா காலத்தில் களத்தில் நின்று போராடும் முதல் நிலை ஊழியர்களான மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம், நீண்ட காலணிகள் உள்ளிட்ட அரசு அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக அவ்வப்போது போராட்டங்களும் நடந்துவருகின்றன. இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்தப்பாடில்லை.

பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்!

அதுமட்டுமின்றி இது குறித்து வெளியில் சொன்னாலோ, பத்திரிகைகளுக்கு செய்தியளித்தாலோ வேலையிலிருந்து நீக்கப்படுவீர்கள் என ஆணையர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தக் கரோனோ வைரஸ் தொற்றை விரட்டுவதில் முதல் களப்போராளிகளாக களத்தில் நிற்பவர்களின் நிலையை அரசு கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க...’வீடுகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும்’- ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details