திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை வடகாடு பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 11 சென்ட் நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் 50 சென்ட் நிலத்தை மட்டும் ஏழு பேர் போலியாக ஆவணங்களைத் தயாரித்து மற்றொருவருக்கு கிரயம் செய்துள்ளனர். இந்த நிலத்தை மீட்டுத்தரக்கோரி அந்தோணிசாமி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற முதியவர் - dindigul farmers grievance meet
திண்டுக்கல்: நிலத்தை மீட்டுத்தரக் கோரி முதியவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதியவர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!
இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்துக்கு வந்த அந்தோணிசாமி, அவரது மனைவி ரோசாலி, அவரது மகன்கள் ஸ்டீபன் கஸ்பார், ஆண்ட்ரூஸ் ராஜா பேரன் டோனீஸ் ஆகியோர் தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றர். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் பெட்ரோல் கேனை பறித்து, அவர்களை தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: தருமபுரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயற்சி