தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையை கடக்க முயன்ற முதியவர்: கார் மோதி உயிரிழப்பு! - In Dindigul 65 year old man dies

திண்டுக்கல்: சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலையை கடக்க முயன்ற முதியவர்: கார் மோதி உயிரிழப்பு!
சாலையை கடக்க முயன்ற முதியவர்: கார் மோதி உயிரிழப்பு!

By

Published : Aug 14, 2020, 2:15 PM IST

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் சர்வோதய நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(65). இவர் காந்திகிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானார். இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.

இது குறித்த விசாரணையில் முதற்கட்டமாக திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனிடையே அம்பாத்துர் காவல் துறையினர் உயிரிழந்த முதியவர் மாரியப்பன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...கணவனை மகளின் உதவியுடன் கொலை செய்த மனைவி - காவல் துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details