திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று(நவ.11) நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அனைவரும் காந்தி தொப்பியை அணிந்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். பின்னர், இசைஞானி இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். பட்டம் பெற்றபோது இசையமைப்பாளர் இளையராஜாவும் காந்தி தொப்பியை அணிந்திருந்தார்.