நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாணவர்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளாமனோர் கலந்து கொண்டனர்.
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐ.பெரியசாமி, "மத்திய அரசு இந்தியாவின் மதச்சார்பின்மையை கலைத்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய மதத்தினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியாவின் தேசிய கீதம் கூட ஒற்றை மொழியில் அமைக்கப்படவில்லை. ஆனால், தற்போது ஒற்றை மொழி, ஒற்றை மதம் என மாற்றிட பாஜக நினைக்கிறது" என்றார்.