தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்! கணவன் தலைமறைவு - கொலை

திண்டுக்கல் அருகே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தலைமறைவான கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Husband kills wife  Dindigul  Husband kills wife by slitting her throat  Dindigul news  Dindigul latest news  மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்  கணவன் தலைமறைவு  திண்டுக்கல்  மனைவியை கழுத்தறுத்து கொலை  கொலை  எரியோடு காவல் துறை
மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்

By

Published : Nov 28, 2022, 9:19 AM IST

திண்டுக்கல்:புளியம்பட்டி அருகே அரண்மனையூரை சேர்ந்தவர் 32 வயதான தேவி. இவருக்கும் பூத்தாம்பட்டியை சேர்ந்த பந்தல் போடும் தொழிலாளி ராஜசேகர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து தேவி வடமதுரை மகளிர் போலீசில் புகார் செய்திருந்தார். அப்போது போலீசார் ராஜசேகரை கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவி தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு மூன்று மகன்களுடன் அரண்மனையூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், மனைவியை தேடி அரண்மனையூருக்கு சென்ற ராஜசேகர், அங்கும் தேவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தேவியை கீழே தள்ளிய ராஜசேகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவியின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எரியோடு காவல் துறையினர், தேவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான ராஜசேகரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மங்களூரு குண்டு வெடிப்பு - மதுரையில் என்ஐஏ விசாரணை

ABOUT THE AUTHOR

...view details