திண்டுக்கல்:வேடசந்தூர் அருகேவுள்ள தாசிரிபட்டியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி (30). இவர், சொந்தமாக சரக்கு வாகனத்தை வைத்து அதனை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி (25) என்ற பெண்ணுடன் திருமணமாகி, அவர்களுக்கு எட்டு மாத பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் கடந்த ஒரு மாதமாக வேடசந்தூரில் உள்ள உசேன்ராவுத்தர் தெருவில் வாடகை வீட்டில் வசத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு தம்பதிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் வினோதினி கிருஷ்ணமூர்த்தியுடன் கோபித்துக் கொண்டு, குழந்தையோடு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாள்களாக தனியாக வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி, நேற்று முன்தினம் (ஜூலை 22) காலை 11 மணியளவில் தனது தந்தையிடம் செல்போன் மூலம் பேசியுள்ளார். அதன் பிறகு கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த வேடசந்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி, வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கிருஷ்ணமூர்த்தியின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தான் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து பேசிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது. அதில் தனது மனைவி வினோதினி, கடனை அடைக்க வைத்திருந்த 3 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்று விட்டதாகவும், இதனால் தனது தம்பிக்கு கால்குலேட்டர் கூட வாங்கி கொடுக்க முடியவில்லை என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல மேலும், தனது பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொள்ளுமாறும், தன்னை தனது தாயும், தம்பியும் மன்னித்துக்கொள்ளும்படியும் கெஞ்சி பேசியுள்ள வீடியோ காண்பவர்களை கண்ணீர் சிந்தும் வைக்கும்படியாக உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க:Honour Killing:நெல்லையில் ஆணவ கொலை? வேற்று சமூகப் பெண்ணை காதலித்த இளைஞர் சடலமாக மீட்பு