திண்டுக்கல்:பழனிக்கு நேற்று முன்தினம் (ஜூன் 30) கேரளாவைச் சேர்ந்த சுகுமாரன்-சத்யபாமா தம்பதியினர் சாமி தரிசனத்திற்கு வந்ததாகக் கூறி, அங்கு தனியார் விடுதியில் அறை பதிவு செய்து தங்கினர். இந்நிலையில் நேற்று (ஜூலை1) நள்ளிரவு அடிவாரம் பகுதியில் அந்த தனியார் விடுதிக்கு கேரளாவைச் சேர்ந்த சிலர் அழுதபடியே வந்தனர்.
இதுகுறித்து விடுதி ஊழியர்கள் கேட்டபோது, இந்த விடுதியில் தங்கியுள்ள கணவன் மனைவியான சுகுமாரன்-சத்யபாமா இருவரும் தங்களது உறவினர்கள் என்றும்; அவர்கள் இருவரும் இந்த விடுதியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பியதோடு, தாங்கள் இருவரும் தற்கொலை செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தம்பதி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர்.