திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதியானது, தேவாங்கர் தெரு. இப்பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 7) இப்பகுதியிலுள்ள சில வீடுகளின் முன்பு, மனித எலும்புக்கூடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் வைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் முன் மனித எலும்புகள்; அடையாளம் தெரியாத நபர்கள் அட்டகாசம்! - காவல்துறை விசாரணை
திண்டுக்கல்: பழனி தேவாங்கர் தெருவிலுள்ள சில வீடுகளின் முன்பு, மனித தலை மற்றும் எலும்பு உள்ளிட்டவைகளை, அடையாளம் தெரியாத நபர்கள் வைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன், சரவணன், பாக்கியம் என்பவர்களின் வீடுகளின் முன் மனிதத் தலை மற்றும் கால்களின் எலும்புகள் வைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை வீடுகளை திறந்து வெளியே வந்தவர்கள், எலும்புக்கூடுகளைக் கண்டு அதிர்ச்சிடைந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து பழனி நகர காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டின் முன் மனித எலும்புக்கூடுகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,