தமிழ்நாடு

tamil nadu

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

By

Published : Jun 16, 2020, 10:58 PM IST

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடத்திற்கு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிட்டு வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடத்திற்கு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிட்டு வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அரசு தேர்வுத்துறை பொறுப்பு இயக்குநர் பழனிச்சாமி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரையில், ”10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11ஆம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு எழுதுவதற்குப் பதிவுசெய்த மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 விழுக்காடு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.


அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும், தங்கள் பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதுவதற்கும், 11ஆம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் எழுதுவதற்கும் பதிவுசெய்த மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள், மாணவர் முன்னேற்ற அறிக்கைகள், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கான மதிப்பெண் பதிவுசெய்யப்பட்டுள்ள அசல் மதிப்பெண் பதிவேடுகள் ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


பள்ளியின் தலைமையாசிரியர்கள் ஜூன் 17ஆம் தேதி முதல் ஜூன் 19ஆம் தேதிக்குள் www .dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 10ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்வுகள் எழுதுவதற்கும், 11ஆம் வகுப்பில் விடுபட்ட தேர்வு எழுதுவதற்கும் பதிவுசெய்த மாணவர்களின் முகப்புத் தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வில் மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாட தேர்வுகளுக்கு தேர்வுகள் நடைபெற்றன. எனவே முகப்புத் தாளுடன் காலாண்டு தேர்விற்கான மாணவர்களின் விடைத்தாள்களையும் வைத்து தைக்க வேண்டும்.


ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரின் விடைத்தாள்களைச் சரிபார்த்து மதிப்பெண்களை முகப்புத் தாள்களில் பதிவுசெய்து வழங்க வேண்டும். மாணவர்களின் மதிப்பெண்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்த பின்னர் உரிய இடத்தில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரும் வகுப்பாசிரியரும் கையொப்பமிட வேண்டும்.

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள அசல் மதிப்பெண் பதிவேடுகளின் இறுதிப் பக்கத்தில் வகுப்பாசிரியரும் பள்ளி தலைமையாசிரியரும் கையொப்பமிட வேண்டும். மேற்குறிப்பிட்டவற்றுள் எவையேனும் இல்லையெனில், அதற்குரிய விளக்கத்தினை பள்ளி தலைமை ஆசிரியர் எழுத்துப்பூர்வமாக மாவட்டக் கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details