திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் சுமார் 10க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவ கழிவுகளான, ரத்தம் ஏற்றும் குழாய், சிகிச்சைக்கு பயன்படுத்திய ரத்தம் படிந்த பஞ்சு, சிரிஞ்சு, ஊசி, குளுகோஸ் குழாய், மருந்து பாட்டில்கள், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பாகங்கள் என அனைத்துக் கழிவுகளையும்; மருத்துவக் கழிவு மேலாண்மை சட்ட விதிகளின் படி தரம்பிரித்து மஞ்சள், கறுப்பு, பச்சை என வண்ணப் பைகளில் வைத்து மருத்துவக்கழிவு மேலாண்மை செய்ய நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் வாகனத்தில் கொடுத்தனுப்ப வேண்டும். இதற்கு கழிவுகளின் எடையைப் பொருத்தும், மருத்துவமனையின் தரத்தைப் பொருத்தும் கட்டணம் வசூலிக்கப்படும். மீறும் மருத்துவமனைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.
குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகள் - தொற்றுநோய் பரவும் முன் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை! - ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனை
திண்டுக்கல்: தனியார் மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளை சாலையோரக் குப்பை தொட்டியில் வீசிச் செல்கின்றனர். அதிலிருந்து தொற்றுநோய் பரவும் முன் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அத்துமீறி மருத்துவமனைக்கு எதிரே உள்ள குப்பைத் தொட்டியில் துணிச்சலாக மருத்துவக் கழிவுகளை கொட்டியுள்ளனர். மேலும் கடந்த மாதம் கூட மருத்துவ கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இருந்தாலும் தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இச்செயலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. எனவே தொற்றுநோய் பரவும் முன் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை, ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மகப்பேறு மருத்துவமனை கால்வாயில் கழிவுகள் தேக்கம் - நோய் பரவும் அபாயம்