தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்துக்காக தாத்தாவின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன் - Land issue

திண்டுக்கல்லில் சொத்துக்காக தாத்தாவின் கழுத்தை அறுத்து கொடூர கொலை பேரனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 28, 2022, 8:00 AM IST

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த மருது (80) - முத்தம்மாள் (75) தம்பதிக்கு முருகேசன், வரதராஜன், ரவி என மூன்று மகன்களும், நாகஜோதி என்ற ஒரு மகளும் உள்ளனர். மருதுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரிப்பதில் குடும்பத்துக்குள் தகராறு இருந்துவந்துள்ளது.

அந்த வகையில் முருகேசனின் மூத்த மகன் சக்திவேல்(27) நேற்றிரவு தாத்தா மருதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தல் ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருதை சராமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த மருது சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அதிகாலையில் அறிந்த ஊர் மக்கள் எரியோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சக்திவேல் கைது செய்யப்பட்டார். விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க:ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி

ABOUT THE AUTHOR

...view details