தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரானா தடுப்பூசி தொடர்பாக அவதூறு - மன்சூர் அலிகானை கைது செய்ய வலியுறுத்தல் - protest

திண்டுக்கல்: கரானா தடுப்பூசி தொடர்பாக அவதூறு பரப்பும் மன்சூர் அலிகானை கைது செய்ய வேண்டும என இந்தது மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்து மக்கள் கட்சி
விடுதலை சிறுத்தை மற்றும் திராவிடர் கழகத்தினை தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்!

By

Published : Apr 18, 2021, 4:52 PM IST

மதுரையில் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பாரதிய ஜனதா கட்சியினரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தர்மா தலைமையில், திண்டுக்கல் நகர் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்சூர் அலிகானை கைது செய்ய வலியுறுத்தல்

“ஜாதி உணர்வை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயலும் விடுதலை சிறுத்தை மற்றும் திராவிட கழகத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக பேசிவரும் சீமான் மற்றும் கரானா தடுப்பூசி தொடர்பாக அவதூறு பரப்பும் மன்சூர் அலிகானை கைது செய்ய வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் மாணவி சரஸ்வதி படுகொலையில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க:கரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details