தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் இந்து முன்னணியினர் சாலை மறியல்! - Hindu Munnani road blockade in Vellore

திண்டுக்கல்: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து வேலூரில் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
சாலை மறியல்

By

Published : Dec 30, 2020, 11:15 AM IST

திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலை வைக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் பெளர்ணமி கிரிவலம் நேற்று (டிச. 29) நடத்தப்பட்டது.

இதில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டு கிரிவலத்தை நடத்திய பொழுது அவர்களைத் தடுத்த காவல் துறையினர், அனைவரையும் கைதுசெய்தனர்.

இதனைக் கண்டித்து வேலூர் மாவட்ட இந்து முன்னணியினர் வேலூரில் உள்ள சித்தூர் பேருந்து நிலையம், கிரீன் சர்க்கில் ஆகிய இடங்களில் நேற்று (டிச. 29) இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சாலை மறியலில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்து முன்னனியின் வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் கிரீன் சர்க்கிலில் இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர், "திண்டுக்கல்லில் காவல் துறையினர் எங்கள் மாநிலத் தலைவரைக் கைதுசெய்தது கண்டிக்கத்தக்கது. திண்டுக்கல் மாவட்ட காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் எங்கள் மாநிலத் தலைவரை இழிவாகப் பேசியுள்ளார்.

அங்குள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் அடிபணிந்து நடக்கக்கூடிய காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் இந்துக்களுடைய வழிபாட்டு உரிமையை பறிக்கின்றன.

உடனடியாக கைதுசெய்யப்பட்ட எங்கள் மாநிலத் தலைவரை விடுவிக்க வேண்டும், திண்டுக்கல் காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இங்கு சாலை மறியலில் ஈடுபட்டுவருகிறோம். மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details