திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, சாலை பராமரிப்பு பணிகளின் ஒப்புதல்களை மாநில அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனைக் கண்டித்து அம்மாவட்டத்திலுள்ள சாலைப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை ஊழியர் சங்கம், ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.