திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகல் இரவு நேரங்களில் கனமழை பெய்துவருகிறது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் நீர்நிலைகளும் நிரம்பிவருகின்றன. மேலும், கொடைக்கானலில் பொதுவாக மழை நேரங்களில் வத்தலகுண்டு மலை சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
கொடைக்கானல் மலை சாலையில் ஆபத்தான மரங்களை அகற்றிய நெடுஞ்சாலைத் துறை! - HighWay Department removed Trees
திண்டுக்கல்: கொடைக்கானல் மலை சாலையில் ஆபத்தான மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றிவருகின்றனர்.
தற்போது தொடர்ந்து மழை பெய்துவருவதால் விழும் தருவாயில் சாலை ஓரங்களில் பல மரங்கள் உள்ளன. இந்நிலையில் ஆபத்தான மரங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை-விடுத்துவந்தனர். வத்தலகுண்டு பகுதிக்குச் செல்லக்கூடிய பிரதான சாலையான செண்பகனூர் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர், வனத் துறையினர், தீயணைப்புத் துறையினர் இணைந்து ஆபத்தான நிலையில் இருந்த மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.
மேலும், அரசின் அனுமதிபெற்று ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்கள் தொடர்ந்து அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர். இதனால் மலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.