திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கீழ்மலையில் தாண்டிக்குடி, பண்ணைக்காடு , பாச்சலூர், மங்கலம்கொம்பு உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகள் அமைந்துள்ளன. பெரும்பாலான மக்கள் விவசாயமே பிரதானத் தொழிலாக செய்து வருகின்றனர். இதில் அவரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை அடிக்கடி பயிரிடுகின்றனர். மேலும் சிலர் காபி விவசாயம் செய்து வருகின்றனர்.
காபி விளைச்சல் உயர்வு; விவசாயிகள் மனநிறைவு - dindigul coffee estate village
திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் காபி விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது காபி ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி உள்ளூர் சந்தையிலும் காபி பயிருக்கு நல்ல விலை கிடைக்கிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் காபி விலை கணிசமாக உயர்ந்திருப்பதாலும், விளைச்சல் அதிகரித்துக் காணப்படுவதாலும் காபி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் காபி விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.