தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு - சுற்றுலாப் பயணிகள் அவதி!

திண்டுக்கல்: கொடைக்கானலில் வெள்ளிநீர் வீழ்ச்சி சோதனை சாவடியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவு வரை வாகனங்களின் அணிவகுப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியுற்றனர்.

kodaikanal_traffic
kodaikanal_traffic

By

Published : Apr 2, 2021, 4:02 PM IST

தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். அந்தவகையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைகானலுக்கு தொடர்ந்து நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகின்றது.

ஏப்ரல் மாதம் முதல் சீசன் ஆரம்பித்த நிலையில் கொடைக்கானலில் பல்வேறு இடங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வெள்ளிநீர் வீழ்ச்சி சோதனை சாவடியில் இருந்து பெருமாள்மலை பகுதி வரை சுமார் 5 கி.மீ., தொலைவு வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பலமணி நேரம் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர், சிலர் திரும்பிச் சென்றனர்.

கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு

மேலும், போக்குவரத்தை சீர் செய்ய போதுமான காவலர்கள் இல்லாமல் இருப்பதும், சோதனை சாவடியில் அலுவலர்கள் அலட்சியமாக செயல்படுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க:’ஸ்டாலின்தான் வர்றாரு, அல்வாதரப் போறாரு’ - அன்புமணி ராமதாஸ் கேலி!

ABOUT THE AUTHOR

...view details