திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் லேசான மழையும், இரவில் மிதமான மழையும் பெய்து வந்தது. கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து பகல், இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து கொட்டி வருகிறது.
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்கா பாம்பார் நீர்வீழ்ச்சி, வட்டகானல் நீர் வீழ்ச்சி, பேரி பால்ஸ் உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகள், சிற்றோடைகளில் அதிக அளவில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த இதமான காலநிலையை அனுபவிக்க கொடைக்கான வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் வெள்ளியாய் கொட்டும் நீரைக் கண்டு மகிழ்கின்றனர். கொடைக்கானல் நீர்வீழ்ச்சி பூங்காவில் பெருமளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
அருவி, சிற்றோடைகளில் நீர் வரத்து அதிகரிப்பு இதையும் படிங்க:வராக நதிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!