நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாள்களாகக் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக பழனி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 60 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு செயல்படத் தொடங்கியுள்ளது.
இதேபோல், பழனியாண்டவர் ஆண்கள் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பழனி ஜீவானந்தம் தெரு, பெரியப்பா நகர் பகுதிகளில் ஆறுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.