தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையை நவம்பர் 3ஆம் தேதி திறக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்!

திண்டுக்கல்: நாகனம்பட்டியில் கட்டப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையை எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி திறக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Oct 21, 2019, 11:21 PM IST

open to oddanchatram

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சி.சிவனேசன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே காய்கறி சந்தை செயல்படுகிறது. அதிகளவில் மக்கள் வசிக்கும் பகுதியில் காய்கறி சந்தை அமைந்துள்ளதால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், நாகனம்பட்டியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் 3 கோடி ரூபாய் செலவில் 2008ஆம் ஆண்டு புதிய சந்தை கட்டப்பட்டது. புதிய சந்தையை திறக்கவிடாமல் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் தடுத்து வருகின்றனர்.ஒட்டன்சத்திரத்தில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தனியார் நிலத்துக்கு ஒட்டன்சத்திரம் சந்தையை மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

எனவே நாகனம்பட்டியில் கட்டப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி சந்ததையை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி முன்னிலையில் இன்று நடைப்பெற்றது.

  1. நாகனம்பட்டியில் கட்டப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையை எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி திறக்க வேளாண் விற்பனைக்குழு செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. இவ்விவகாரத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர், தனி நபர்கள், அமைப்புகள் தலையிடக்கூடாது. யாராவது தலையிட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்து புகார் மீது திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருநங்கையை திருமணம் செய்த இளைஞர்: குடும்பத்தினர் கொலை மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details