திண்டுக்கல்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்களது துப்பாக்கிகளை அந்தந்த காவல் எல்லைக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் துப்பாக்கிகள் அனைத்தும் மீண்டும் அந்தந்த உரிமைதாரர்களிடம் ஒப்படைக்கப்படும்.