திண்டுக்கல்:பழனியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் அமெரிக்காவிற்குச்சென்றுள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் தனது கணவருடன் சில காலம் இருந்துவிட்டு கடந்த வாரம் இந்தியா வந்துள்ளார். பழனிக்கு வந்த அந்தப் பெண் தஞ்சாவூரில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல விழாவிற்குச்சென்று வந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் நான்கு நாள்கள் சிகிச்சையில் இருந்தார். அதைத்தொடர்ந்து அவரை பழனியில் உள்ள அவரது வீட்டிற்கு உறவினர்கள் அழைத்து வந்தனர். இந்நிலையில், மருத்துவப்பரிசோதனையில் அந்தப் பெண்ணிற்கு கரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது தெரியவந்துள்ளது.