திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கான 32ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 475 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்.
இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி சார்பாக தங்கப்பதக்கங்கள் கொடுத்து சிறப்பித்தனர்.
விழாவின் சிறப்பு விருந்தினர் லட்சுமணன் சோமசுந்தரம், மாணவர்களிடையே சிறப்புரையாற்றி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி மாணவி ஹரித்தா மாநில அளவில் ஒன்பதாவது இடத்தையும், தாரணி 12ஆவது இடத்தையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா இதையும் படிங்க: 'சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் நிகழும்'! - எம்எல்ஏ தனியரசு