திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த காப்பிளியம்பட்டி கிரமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமகிருஷ்ணன் (29). இவர், 2016 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்திலிருந்து காப்பிளியம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது கோவை அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், இதற்கு இழப்பீடு கேட்டு ராமகிருஷ்ணனின் தந்தை பெரியசாமி பழனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6.93 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இன்று வரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இழப்பீடு கொடுக்காத காரணத்தால் வட்டியுடன் சேர்த்து 8.35 லட்சம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்ட பெரியசாமிக்கு வழங்க வேண்டும். கொடுக்க தவறினால் பேருந்தை ஜப்தி செய்யப்படும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி செழியன் உத்தரவிட்டார்.