தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெலங்கானா ஆளுநர் தமிழிசை திண்டுக்கல் வருகை! - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

திண்டுக்கல்: திண்டுக்கல் வந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

By

Published : Mar 10, 2020, 7:43 PM IST

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தேனி செல்கிறார். திருச்சியிலிருந்து தேனி செல்லும் வழியில், தமிழிசை திண்டுக்கல்லுக்கு வருகை புரிந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள விருந்தினர் மாளிகையில், ஆளுநர் தமிழிசைக்கு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி பூங்கொத்து அளித்து வரவேற்றார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை திண்டுக்கல் வருகை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான காவல் துறையினர் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆளுநர் தமிழிசை பாஜக நிர்வாகிகளுடன் சந்தித்துப் பேசினார். கட்சித் தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதையும் படிங்க: போதிய பயணிகள் இல்லாததால் 18 சா்வதேச விமானங்கள் ரத்து

ABOUT THE AUTHOR

...view details