திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாகும். இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
கொடைக்கானலில் குப்பை லாரிகளால் பொதுமக்கள் அவதி!
திண்டுக்கல்: கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான சேதமடைந்த குப்பை லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரிகளும் தண்ணீர் லாரிகளும் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்த நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது போக்குவரத்திற்கும் இடையூறாக காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர் . இதேபோல் நகராட்சி அலுவலகத்தில் பயன்பாடு இன்றி சேதமடைந்த குப்பை அள்ளும் வாகனங்களும் தண்ணீர் லாரிகளும் காணப்படுகின்றன. இந்த வாகனங்களை மாற்று பகுதிகளுக்கு இடமாற்றம் செய்தால் பேருந்து நிறுத்தத்தில் இடையூறு இன்றி காணப்படும். எனவே சேதமடைந்த வாகனங்களை உடனே இடமாற்றம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.