திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கிவரும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2017-18 ஆண்டு படித்து முடித்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 75 பேருக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இலவச மடிக்கணினி வழங்கக் கோரி முன்னாள் மாணவர்கள் சாலை மறியல் - அரசு இலவச மடிக்கணினி
திண்டுக்கல்: அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு அரசு இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
protest
இதனை கண்டித்து முன்னாள் மாணவர்கள் கொடைக்கானல் -வத்தலகுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.