திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி 4 ஆவது தெருவிலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி 1 ஏக்கர் 23 சென்ட் நகராட்சிக்கு சொந்தம் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து நகராட்சி சார்பில் பலமுறை தெரிவித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்துவந்தது. தொடர்ந்து இன்று கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன் தலைமையில் காவல் துறையினர் உதவியுடன் ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்ற முயலும்போது ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.