தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வத்தலக்குண்டில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய பஸ்: சிசிடிவி வைரல்! - Dindigul District top News

வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடிய அரசுப் பேருந்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வத்தலக்குண்டில் ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பஸ்: சிசிடிவி வைரல்
வத்தலக்குண்டில் ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பஸ்: சிசிடிவி வைரல்

By

Published : Dec 2, 2022, 7:14 PM IST

திண்டுக்கல்: பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் நகரின் மையப்பகுதியிலுள்ள வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் நிலக்கோட்டை நோக்கி செல்வதற்காக விநாயகர் கோயில் அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் அருகில் டீ குடிக்க சென்றிருந்தனர்.

அப்போது நிலக்கோட்டை மகளிர் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் திடீரென தானாக ஸ்டார்ட் ஆகி குதித்து குதித்து பேருந்து நகரத் தொடங்கியது.

அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவிகள் அலறியடித்து ஓடினர். அதனைக்கண்டு சுதாரித்த ஓட்டுநர் மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று பேருந்தை நகர விடாமல் தடுத்ததால், பெரும் அசம்பாவிதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. அரசுப்பேருந்து தானாக நகரும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வத்தலக்குண்டில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய பஸ்: சிசிடிவி வைரல்!

இதையும் படிங்க: திருவண்ணாமலை திருவிழா: பக்தர்களுக்கு தீபம் பார்க்க நிபந்தனை!

ABOUT THE AUTHOR

...view details