திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அனல் காற்றும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அதிகரிக்கும் உடற்சூட்டை தணிக்க பழச்சாறு, குளிர்பானங்கள் பருகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வெயில் காலத்தை கருத்தில் கொண்டு குழாய் பொருத்தப்பட்ட மண்பானை கூஜா, ஜாடி, பானைகள் சந்தைக்கு விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையம், பழனி பைபாஸ் ரோடு, நொச்சி ஓடைப்பட்டி, கூலம்பட்டி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பானை கடைகளில் விற்பனை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.