மத்தியில் ஆளும் பாஜக அரசு 50 ரயில் நிலையங்களையும், 150விரைவு ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைத்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இப்போராட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் மத்திய அரசு தனியாருக்கு அளித்துள்ள அனுமதி ரயில்வே துறையையும், ரயில்வே துறையை சார்ந்துள்ள ஊழியர்களையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.
அதுமட்டுமின்றி பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால் கோடிக்கணக்கான மக்கள் பயணித்து வரும் பொதுப்போக்குவரத்தில் சாமானிய மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படும் என்றார்.
இதையும் படிங்க: தைரியமிருந்தால் காங்கிரஸ் இந்த அறிவிப்பை வெளியிடட்டும்: அமித் ஷா சவால்!