தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காற்றில் பறந்த சமூக இடைவெளி: திண்டுக்கல் ஆட்டுச்சந்தையில் குவிந்த பொதுமக்கள் - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: ஆட்டுச்சந்தையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் கூடியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் ஆட்டுச்சந்தையில் குவிந்த பொதுமக்கள்
திண்டுக்கல் ஆட்டுச்சந்தையில் குவிந்த பொதுமக்கள்

By

Published : Oct 22, 2020, 2:42 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அப்போது திருச்சி, மணப்பாறை, தரங்கம்பாடி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

இந்நிலையில் இன்று (அக்.22) செயல்பட்ட ஆட்டுச்சந்தையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கூடினர். கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க அரசு பலமுறை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஆட்டுச்சந்தையில் ஆயிரக்கணக்கானோர் கூடியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காற்றில் பறந்த சமூக இடைவெளி - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details