தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் சிறுமி சந்தேகத்திற்குரிய வகையில் மரணம்: நீதி கேட்டு வலுக்கும் போராட்டம் - கொடைக்கானலில் சிறுமி மர்ம மரணம்

கொடைக்கானல் அருகே ஐந்தாம் வகுப்புப் பயிலும் சிறுமி எரிந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவ்விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி பாச்சலூர் கிராம மக்கள் ஏரிச்சாலை பிரதானப் பாதையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமி மர்ம மரணம் கொடைக்கானலில் போராட்டம்
சிறுமி மர்ம மரணம் கொடைக்கானலில் போராட்டம்

By

Published : Dec 22, 2021, 3:46 PM IST

Updated : Dec 22, 2021, 3:51 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பாச்சலூர் கிராமம் அமைந்துள்ள‌து. இந்தக் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளி வளாகத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கிராமத்தில் பலகட்டப் போராட்டங்கள் நடைபெற்றன.

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்

பின்னர், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான‌ கூக்கால் கிராம‌த்தில், ம‌க்கள் த‌ங்க‌ளது குழ‌ந்தைகளைப் ப‌ள்ளிக‌ளுக்கு அனுப்பாம‌ல் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.

கொடைக்கான‌ல் வருவாய்க் கோட்டாட்சிய‌ர் முருகேச‌ன் அந்த‌க் கிராம‌த்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுப‌ட்டார். பேச்சுவார்த்தையில் உட‌ன்ப‌டாத ம‌க்கள் உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்படும் வ‌ரை போராட்ட‌ம் தொட‌ரும் என‌த் தெரிவித்த‌ன‌ர்.

அதன்படி இன்று (டிசம்பர் 22) பாச்சலூர் உள்ளிட்ட கிராம மக்கள் ஏரிச்சாலை பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல் துறையினரின் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:பார்கள் டெண்டர்களுக்குத் தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

Last Updated : Dec 22, 2021, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details