தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளிப்பதற்காக ஹீட்டர் போட்டபோது மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு - திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே குளிக்க ஹீட்டர் போட்டபோது மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளிப்பதற்காக ஹீட்டர் போட்ட போது மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு
குளிப்பதற்காக ஹீட்டர் போட்ட போது மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு

By

Published : Sep 23, 2022, 3:21 PM IST

திண்டுக்கல்: வடமதுரை அருகே உள்ள ஏ.வி.பட்டியைச்சேர்ந்தவர் பெரியசாமி; கூலித் தொழிலாளி. இவருக்கு முத்துராணி என்ற மனைவியும் தவதர்ஷினி, வர்ஷினி தேவி, சங்கரி என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.

மூத்த மகளான தவதர்ஷினி வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை குளிப்பதற்காக வீட்டில் ஹீட்டர் போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தவதர்ஷினியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட தவதர்ஷினி படுகாயம் அடைந்தார். அவரை அவரது குடும்பத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு தவதர்ஷினியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குளிப்பதற்காக ஹீட்டர் போட்டபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திண்டுக்கல் பிஎப்ஐ அலுவலகத்தில் தேசிய புலனாய்வுத்துறை சோதனை

ABOUT THE AUTHOR

...view details