தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலர் தினத்தை அழகாக்கும் கார்னேஷன் மலர்கள் - விலை குறைந்ததால் சாகுபடியாளர்கள் கவலை! - கொடைக்கானல் சாகுபடி

திண்டுக்கல்: காதலர் தினத்தை வரவேற்கும் விதமாக கொடைக்கானலில் சாகுபடி செய்திருந்த கார்னேஷன் மலர்கள் கரோனாவுக்கு முன்பு இருந்த விலையோடு தற்போது விலை குறைந்திருப்பதால் சாகுபடியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

காதலர் தின கார்னேஷன் மலர் சாகுபடி
காதலர் தின கார்னேஷன் மலர் சாகுபடி

By

Published : Feb 14, 2021, 10:45 AM IST

உலகம் முழுவதும் இன்று (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தன்று காதலின் சின்னமாக கருதப்படும் ரோஜாவை அனைவரும் தங்களுடைய காதலர்களுக்கு கொடுப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ரோஜாவை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை கார்னேஷன் மலர்கள் பிடித்திருக்கிறது.

கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் குடில்கள் அமைத்து சாகுபடி செய்யப்படுவதுதான் கார்னேஷன் மலர்கள். பல்வேறு வண்ணங்களில் கார்னேஷன் மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றது. கொடைக்கானலில் சாகுபடி செய்யக்கூடிய கார்னேஷன் மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பல்வேறு வெளிமாநிலங்களான பெங்களூரு, புனே உள்ளிட்ட நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஒரு பூவின் விலை கடந்த ஆண்டு 11 ரூபாய் வரை சென்றது.

காதலர் தின கார்னேஷன் மலர் சாகுபடி

ஆனால் தற்போது கொடைக்கானலில் சாகுபடி செய்யக்கூடிய கார்னேஷன் மலர்கள் 7 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக சாகுபடியாளர்கள் தெரிவிகின்றனர். விலை குறைந்தாலும் கார்னேஷன் மலர்களின் மவுசு தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

காதலர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்த அழகிய கார்னேஷன் மலர்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் பிரதமர் மோடி: செய்திகள் உடனுக்குடன்!

ABOUT THE AUTHOR

...view details