திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பிரகாசபுரம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் சுத்திகரிக்கப்படாமல் அதன் அருகே இருக்கும் வனப்பகுதியில் கொட்டப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும், குப்பை சுத்திகரிக்கும் இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த குப்பைக் கிடங்கு அருகே வனப்பகுதி உள்ளதால், அப்பகுதிக்கு வரும் வன விலங்குகளான காட்டெருமை, பன்றி, மான், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் நெகிழி கழிவுகளை உண்பதால் உயிரிழக்கும் சூழல் உருவாகிறது. இதனால், பழுதடைந்துள்ள குப்பை சுத்திகரிக்கும் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பை சுத்திகரிக்கும் எந்திரங்களை புதுப்பிக்க பொது மக்கள் கோரிக்கை மேலும், கொடைக்கானலின் அடையாளமாக உள்ள இயற்கை அழகை மாசடையச் செய்வது சுற்றுலாவை பாதிக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது