திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் விலையில்லா இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கப்பட்டன. நத்தம், சாணார்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தம்பட்டி, ராகலாபுரம் ஊராட்சியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 370 பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. அதன்படி ஒரு நபருக்கு 4 ஆடுகள் வழங்கப்பட்டன.
ஆடுகள் வாங்க அலைமோதும் கூட்டம் - ஆடுகள் வாங்க அலைமோதும் கூட்ட
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசின் விலையில்லா இலவச வெள்ளாடுகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
goat sale
இந்நிகழ்வில் கால்நடை துறை உதவி இயக்குனர்கள் அப்துல்காதர், செந்தில்குமார், நொச்சி ஓடைப்பட்டி லிங்கவாடி கால்நடை மருத்துவர்கள் ஸ்ரீதர், லட்சுமிபிரியா, ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச ஆடுகள் வழங்கினர். ஆடுகளை வாங்க காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்ததால் சாலையே பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!