திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுவரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த அன்பழகன். இவரது, தந்தை நெல்லை மாறன்; திமுக தலைமைக் கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தவர். அன்பழகனின் மனைவி பேபி பொன்மணி (65). பேபி பொன்மணி ஓய்வு பெற்ற அரசு ஆசிரியை ஆவார்.
இத்தம்பதியினருக்கு எஸ்தர் ஜானிகா என்ற மகள் உள்ளார். இவரது, சொந்த ஊர் மதுரை மாவட்டம் பேரையூர் ஆகும். இந்திய காப்பீட்டுக் கழகத்தில் வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தவர் அன்பழகன். பின்னர், தனது பணியை கடந்த 2006ஆம் ஆண்டு ராஜினாமா செய்துவிட்டு, பழனி சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.