தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி நினைவு தினம் - முன்னாள் அமைச்சர் மரியாதை! - Kalaignar Karunanidhi

திண்டுக்கல்: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.

former minister tribute for Karunanidhi memorial day in Dindigul
former minister tribute for Karunanidhi memorial day in Dindigul

By

Published : Aug 7, 2020, 5:41 PM IST

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மெரினா கடற்கரையில் சிறிது தூரம் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் கனிமொழி, துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள திமுக கட்சி அலுவலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்பட திமுக நிர்வாகிகள் ஆகியோர் திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அங்கு குறைந்த அளவிலான கட்சி உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details