தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த நிதியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளும் திமுக துணைப் பொதுச்செயலாளர் - dmk duputy general secretary i.periyasamy

திண்டுக்கல்: குடகனாறு தூர்வாறும் பணியினை ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளரான இ.பெரியசாமி தனது சொந்த நிதியில் மேற்கொண்டுள்ளார்.

former minister i.periyasamy commenced irrigation channel cleaning work in dindugal
former minister i.periyasamy commenced irrigation channel cleaning work in dindugal

By

Published : Aug 30, 2020, 2:42 PM IST

கடந்த ஒன்பது வருடங்களாக குடகனாறு தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் சுமார் 4 ஆயிரம் நிலப்பரப்புள்ள விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பெரியசாமியிடம் குடகனாற்றை தூர்வார வேண்டுமென வலியுறுத்தினர்.

இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற இ.பெரியசாமி தனது சொந்த நிதியில் சுமார் ரூ. 90 லட்சம் மதிப்பில் குடகனாற்றை தூர்வார உத்தரவிட்டார்.

அதன்படி பழனி சாலையில் உள்ள பாலம் ராஜக்காபட்டி பாலத்திலிருந்து தெற்கே அனுமந்தராயன்கோட்டை பாலம் வரை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இதுபோல ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கம் முதல் அனுமந்தராயன்கோட்டை பாலம் வரை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆத்தூர் சொக்குப்பிள்ளை ஓடையிலிருந்து அகரம் வரை 27 கி.மீட்டருக்கு தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

இதனிடையே தாமரைக்குளத்திற்கு தண்ணீர் கொண்டுவரும் பணிகள் நடைபெறுவதற்கு அப்பகுதி பாசன விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தூர்வாரும் பணியை ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் கு.சத்தியமூர்த்தி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், சித்தலகுண்டு, பொன்னிமாந்துரை நீர்ப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் வி.ஜோசப் அருளானந்தம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details