சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தேர்தல் உறுதியாக நடைபெறும் என்று நேற்றைய தினம் கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்றமும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
ஸ்டாலின் ஏதும் சொன்னா நம்பாதீங்க - சொல்கிறார் சீனிவாசன்! - seenivasan about stalin
மதுரை: உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்று ஸ்டாலின் பரப்பும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
எனவே ஸ்டாலின் தொடர்ச்சியாகத் தேர்தல் நடைபெறாது என்ற குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார். வதந்திகளை நம்ப வேண்டிய அவசியமில்லை, உள்ளாட்சித் தேர்தல் நிச்சயமாக நடைபெறும்” என்று கூறினார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு, “மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் அதற்கான விளக்கம் அளித்துவிட்டார். தொடர்ந்து இது குறித்துப் பேசத் தேவையில்லை” என்று கூறிச் சென்றார்.
TAGGED:
seenivasan about stalin