திண்டுக்கல்:கொடைக்கானலில் 7 வன சரகங்களிலும் 245 பணியாளர்கள் 3 வனவிலங்கு ஆய்வாளர்கள் ஆகியோர் முதற்கட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்குப்பில் ஈடுபட்டிருந்தனர். வனவிலங்குகளின் கால் தடம், வனவிலங்குகளின் எச்சம், நேரில் பார்ப்பது உள்ளிட்ட வகைகளில் இந்த முதற்கட்ட வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட பணி வரும் வாரத்தில் தொடங்கவுள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கொடைக்கானல் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் மருத்துவர் திலீப் கூறியதாவது, “ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் கொடைக்கானல் வன கோட்டத்திற்கு உட்பட்ட ஏழு வனசரகங்களிலும் 236 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்களில் குறிப்பாக புலி உள்ளிட்ட மாமிச உண்ணிகளின் நடமாட்டம் பற்றி கண்காணிக்கப்படும்.